fbpx

2 அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு…

பிரிட்டனில் 2 மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தததால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது..

பிரிட்டன் நாடாளுமன்ற எம்பி கிறிஸ் பிஞ்சர், ஒரு தனியார் கிளப்பில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.. இதற்கு மத்திய கிறிஸ் பிஞ்சர் துணை தலைமைக் கொறடா பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எம்.பி பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.. ஆனால் பிஞ்சர் குறித்து பேசிய போரிஸ் ஜான்சன் “ அரசாங்கத்தில் பிஞ்சரை நியமித்தது தவறு என்று நான் நினைக்கிறேன், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதனால் மோசமாக பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கொள்ளையடிக்கும் அல்லது தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் எவருக்கும் இந்த அரசாங்கத்தில் இடமில்லை என்பதை நான் முற்றிலும் தெளிவுபடுத்த விரும்புகிறேன், ”என்று ஜான்சன் கூறினார்.

கடந்த ஐந்து நாட்களாக பிஞ்சர் விவகாரம் குறித்து அரசு முரண்பாடான விளக்கங்களை அளித்து வந்தது.. பிப்ரவரியில் பிஞ்சரை பதவி வழங்கப்பட்ட போது ஜான்சன் எந்த குற்றச்சாட்டுகளையும் அறிந்திருக்கவில்லை என்று அமைச்சர்கள் ஆரம்பத்தில் கூறினர். ஆனால் போரிஸ் ஜான்சனுக்கு பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தெரியும் என்று அரசின் செய்தித்தொடர்பாளர் கூறினார்..

இந்நிலையில் இந்த போரிஸ் ஜான்சன் கிறிஸ் பிஞ்சர் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரச் செயலர் சஜித் ஜாவித் இருவரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர், பிரதமர் தனது அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரின் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை கையாண்ட விதத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

“இனிமேலும் நல்ல மனசாட்சியுடன் இந்த அரசாங்கத்தில் என்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதை மிகுந்த வருத்தத்துடன் உங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று ஜாவித் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சுனக் கூறுகையில், “அரசாங்கம் முறையாகவும், திறமையாகவும், தீவிரமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இது எனது கடைசி மந்திரி வேலையாக இருக்கலாம் என்பதை நான் அங்கீகரிக்கிறேன், ஆனால் இந்த தரநிலைகள் போராடுவதற்கு தகுதியானவை என்று நான் நம்புகிறேன், அதனால்தான் நான் ராஜினாமா செய்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்

போரிஸ் ஜான்சனுக்கு அடுத்த படியாக கன்சர்வேடிவ் கட்சிக்குள் சாத்தியமான தலைமைப் போட்டியாளர்களாக சுனக் மற்றும் ஜாவிட் இருவரும் காணப்படுகின்றனர். இருவரும் இப்போது பிரிட்டன் எதிர்கொள்ளும் இரண்டு பெரிய பிரச்சினைகளுக்குப் பொறுப்பாக இருந்தனர்.. அந்த 2 மூத்த அமைச்சர்களும் தற்போது ராஜினாமா செய்திருப்பது போரிஸ் ஜான்சனுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது..

Maha

Next Post

கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் கனமழை.. இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

Wed Jul 6 , 2022
கர்நாடகாவில் கனமழை தொடர்வதால் இன்று 2 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்து வருவதால் நிலச்சரிவு மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர், மறவந்தே ஆகிய கடற்கரைகளிலும், உல்லால் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் […]
தென்மேற்கு பருவமழை எப்போது ? வானிலை மையம் புதுத்தகவல்

You May Like