fbpx

இலங்கையிடம் இருந்து மீட்கப்படுகிறதா கச்சத்தீவு..? மத்திய அரசு பரபரப்பு பதில்..!

கச்சத்தீவு இலங்கையிடம் இருந்து மீட்கப்படுமா என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக எம்.பி வில்சன் கச்சத்தீவு தொடர்பாக மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக 3 கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், முதலாவதாக, “1974 மற்றும் 1976ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க இந்திய அரசு ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறதா? இரண்டாவதாக, கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதா? மூன்றாவதாக, அப்படி தொடங்கப்பட்டிருந்தால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும், பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும்” என திமுக எம்.பி.வில்சன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவு மீட்கப்படுமா? மத்திய அரசு பரபரப்பு பதில்..!

இந்த 3 கேள்விகளுக்கும் ஒரே பதிலாக எழுத்துப்பூர்வ விளக்கத்தை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் வழங்கியுள்ளார். அதில் ”இலங்கையுடனான கடல் எல்லைகள் வரையறை ஒப்பந்தங்களை 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளிலேயே இந்திய அரசு மேற்கொண்டு முடித்துவிட்டது. அந்த ஒப்பந்தங்களின்படி இந்தியா, இலங்கை சர்வதேச கடல் எல்லை கோடு பகுதியில் கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் வருகிறது. தற்போது கச்சத்தீவு விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என தெரிவித்தார்.

Chella

Next Post

இங்கிலாந்து பிரதமர் ஆவாரா?... இந்திய வம்சாவளி ரிஷி சுனக்...!

Thu Jul 21 , 2022
இங்கிலாந்து, பிரதமர் வேட்பாளராக இறுதி கட்ட போட்டிக்கு இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக லிஸ் டிரஸ் களத்தில் உள்ளார். இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு போட்டி கடுமையானது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் , லிஸ் டிரஸ், பென்னி உட்பட எட்டு பேர் போட்டி போட்டனர். இந்நிலையில் இதுவரை நடை பெற்ற வாக்கெடுப்பில் […]

You May Like