fbpx

தமிழகத்தை ஆக்கிரமிக்கின்றதா கேரளா? தலைவர்கள் பரபரப்பு கோரிக்கை…

கேரள அரசு எல்லைப்பகுதியை அளவிடுவதாகக் கூறி தமிழக எல்லையை ஆக்கிரமிப்பதாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக நாராயணன் திருப்பதி ’’ தமிழகம்-கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக தன்னிச்சையாக கேரள அரசு செயல்பட்டு தமிழக மக்களின் நிலங்களை தங்களின் வருவாய் நிலங்கள் ஆக்கிரமித்து வருவது கண்டிக்கத்தக்கது. பல லட்சம் ஏக்கர் நிலங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசு அத்துமீறி முயற்சிசெய்துவரும் நிலையில் இதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை’’ என குற்றம்சாட்டியுள்ளார்.

வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விரைவில் இரு மாநில அரசுகளும் இணைந்து மறு ஆய்வு நடத்தும்’’ என்று தெரிவித்துள்ளது நகைப்புக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக எல்லையில் அத்துமீறி செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து , மறு ஆய்வு பணியை நிறுத்த தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். என கேட்டுக்கொண்டுள்ளார்.

பழநெடுமாறன், கூறுகையில் தமிழகம்-கேரளா எல்லையில் இருக்கும் கிராமங்களில் கணினி முறையில் மறு சர்வே செய்யும் திட்டத்தை கேரள அரசு கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் செயல்படுத்தி வருகின்றது. தமிழக அரசின் ஒத்துழைப்பின்றி கேரளா இந்த முயற்சியில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

டி.டி.வி. தினகரன் கூறுகையில், எல்லைப்பகுதியில் ரீ சர்வே என்ற பெயரில் தமிழகத்திற்கு சொந்தமான கிராமங்களை ஆக்கிரமிக்க கேரள அரசு முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக நடக்கும் அத்துமீறலை திமுக அரசு தடுக்கவில்லை. இனியாவது விழித்துக் கொள்ளுமா என கூறியுள்ளார்.

Next Post

இங்கிலாந்து டாஸ் வென்றது-இந்தியா பேட்டிங்!!

Thu Nov 10 , 2022
அடிலைடு மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து விளையாடும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. டி20 உலக கோப்பை போட்டி பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் அணி இறுதி சுற்றுக்கு நுழைந்துள்ள நிலையில் இன்று இந்தியாவும் இங்கிலாந்தும் அரையிறுதியில் மோதுகின்றது. நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 3-வது முறையாக இறுதிக்கு தேர்வாகி உள்ளது. இன்று 1.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. […]

You May Like