நடிகர் ரன்வீர் சிங் தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி இருக்கிறார். இதையடுத்து, கர்ப்ப காலத்தில் மனைவி தீபிகாவைப் பிரிகிறாரா ரன்வீர் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அடுத்தடுத்த பிளாக் பாஸ்டர் படங்களில் நடித்து வரும் பாலிவுட்டின் டாப் ஜோடியாக திகழ்ந்து வருகின்றனர் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். கடந்த 2018-ஆம் ஆண்டு காதலித்து திருமண பந்தத்தில் இணைந்த இவர்கள் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்த ஜோடிகள் தாங்கள் பெற்றோர்கள் ஆக போவதாக அறிவித்தனர்.
இப்படியான சூழ்நிலையில்தான், ரன்வீர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து திருமணப் புகைப்படங்களைத் திடீரென நீக்கியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பொதுவாக சினிமா பிரபலங்கள் தாங்கள் பிரிய போகிறோம் என்பதை இப்படித்தான் புகைப்படங்களை நீக்கி ரசிகர்களுக்கு தெரிவிப்பார்கள்.
தீபிகா படுகோனே, கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் ரன்வீர் தீபிகாவைப் பிரிந்து விட்டாரா… இருவருக்குள்ளும் மனக்கசப்பா?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால், தீபிகாவுடன் எடுத்த மற்ற புகைப்படங்களை அவர் நீக்கவில்லை, வதந்திகளில் உண்மை இல்லை என்ற தகவலும் வெளிவருகின்றன.