நடிகர் சிம்பு நோய்த்தொற்று காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உடல் எடையை குறைத்து ஒட்டுமொத்தமாக ஆளே மாறி இருக்கிறார்.சுறுசுறுப்பாக படப்பிடிப்புகளை முடிப்பது என்று அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்தார் ஈஸ்வரன், மாநாடு, மகா வெந்து தணிந்தது காடு தற்போது பத்து தல என்று அடுத்தடுத்து திரைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
மிக விரைவில் 10 தல திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் கேங்ஸ்டர் ஆக அவர் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. முஃட்டி என்ற கன்னட திரைப்படத்தின் ரீமேக் தான் பக்கத்துல என்பது நான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
மார்ச் மாதம் 30 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகின்ற நிலையில், படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
நடிகர் சிம்புவிற்கு சில காதல் தோல்விகள் உண்டானது. அதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான். 40 வயதாகும் இவருக்கு அவருடைய வீட்டில் பெண் தேடி வருகிறார்கள். அவ்வபோது திருமணம் தொடர்பான வதந்திகளும் வந்து செல்கின்றன.
அந்த வகையில், தற்சமயம் இலங்கையில் உள்ள பிரபல தொழிலதிபரின் மகளை சிம்பு திருமணம் செய்யப் போவதாகவும் அவரது பெற்றோர்கள் தேர்வு செய்து முடித்து விட்டார்கள் என்றும் செய்திகள் வெளி வந்திருக்கின்றன.
இது உண்மையா? இல்லையா, என்பது தொடர்பாக சிம்புவின் தரப்பில் இருந்து தான் விளக்கம் கொடுக்க வேண்டும். ஆனால் நடிகர் சிம்புவின் திருமணத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.