சிம்புவின் நடிப்பில் கடைசியாக ‘பத்துதல’ திரைப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து, அவரின் 48-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் சிம்புவின் திருமணப் பேச்சுக்கள் மீண்டும் தலை தூக்கத் தொடங்கிவிட்டன. அதாவது, சிம்பு இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது. ஆனால், அது பின்னர் வதந்தி எனத் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சிம்பு ஆந்திராவை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரும், சினிமா ஃபைனான்ஸியருமான ஒருவரின் மகளை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுதொடர்பாக சிம்பு தரப்பிலிருந்து எவ்வித அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. இதனால், இது எந்தளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.