fbpx

அரசியல் கட்சியாக மாறுகிறதா விஜய் மக்கள் இயக்கம்..? நடிகர் விஜய் திடீர் உத்தரவு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர், தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார். இந்த இயக்கத்திற்கு புஸ்ஸி என்.ஆனந்தை பொதுச்செயலாளராக உள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அத்துடன் கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு சில இடங்களில் அந்த மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.

மேலும் இந்த விஜய் மக்கள் இயக்கம் வரும் காலங்களில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த பொதுச்செயலாளர் புஸ்ஸ்.என்.ஆனந்துக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. விஜய் மக்கள் இயக்கத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

Chella

Next Post

சிறையில் பெண் உள்பட 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு..!! மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..!!

Mon Apr 10 , 2023
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு எச்ஐவி வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஒரு பெண் கைதிக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அங்குள்ள மருத்துவர்கள் கூறுகையில், சிறையில் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்ட கைதிகளின் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது சிறை நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகளின் சிகிச்சை நிலவரம் குறித்து பேசிய மருத்துவர், ‘எச்ஐவி நோயாளிகளுக்காக சிகிச்சை மையம் […]

You May Like