fbpx

பில் இருக்கா? இல்லையா ஒரே கேள்விதான்? அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும் “கோழி கொக்கரக்கோன்னு” வச்சு செய்த செந்தில் பாலாஜி….

பாஜக தலைவர் அண்ணாமலையின் கைக்கடிகார சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதன் பில்லை கேட்டு செந்தில் பாலாஜி ஒரு பதிவை போட்டுள்ளார்.

கடந்த மாதம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50000 இலவச மின் இணைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக அரசு சிறப்பாகவும் பல்வேறு துறைகளும் வெளிப்படையாக செயல்பட்டு வரும் நிலையில் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இல்லாமல் பாஜக தலைவர் பேசிய வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், நான் கேட்ட கேள்வி வாங்கிய கடிகாரத்திற்கு பில் உள்ளதா என்று தான். தேர்தலுக்கு முன் வாங்கினாரா இல்லை பின்னரா என்றால் பில்லை காட்ட சொல்லுங்கள்.மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது. மடியில் கணம் உள்ளது. பாஜகவினர் வார் ரூம் போட்டு தொழிலதிபர்களை மிரட்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் இன்று மாலைக்குள் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும், எந்த கடையில் எந்த விலைக்கு வாங்கினார் என்று, ஆதாரத்தை வெளியிட வேண்டும். மேலும் அந்த கடிகாரம் யாரிடமோ வெகுமதி வாங்கியது என்றும் அதற்கான பில்லை இன்று மாலை வெளியிட வேண்டும் என சவால் விடுத்தார்.அந்த கடிகாரத்திற்கான பில் தற்போது தயாரிக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதனை வெளியிடும்போது அடுத்தகட்ட குற்றச்சாட்டுகளை தான் தெரிவிப்பதாக கூறினார் செந்தில் பாலாஜி.

இதை தொடர்ந்து ட்விட்டரில் பதிவு செய்த செந்தில் பாலாஜி ” பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்(அ)இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது. என்று பாஜக தலைவர் அண்ணாமலையை கலாய்த்துள்ளார்.

Kathir

Next Post

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா...! பிணங்கள் வெளியானதால் பீதியில் மக்கள்...!

Wed Dec 21 , 2022
எதிர்வரும் நாட்களில் சீனாவில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், சமூக ஊடகங்களில் பரவி வரும் பல காணொளிகள் மற்றும் படங்கள், நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் இறந்த உடல்களின் குவியலைக் காட்டியுள்ளன. கொரோனா தொடர்பான இறப்புகளைப் புகாரளிப்பதை சீனா நிறுத்திய நேரத்தில் இந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது. தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் அறிக்கையின்படி, பெய்ஜிங் முக்கிய நகரங்களில் உள்ள இறுதிச் சடங்குகளில் உடல்களின் எண்ணிக்கையைப் […]

You May Like