fbpx

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அதிரடி மாற்றமா..? மிஸ் ஆகுதே..!! அரசுக்கு பறந்த திடீர் கோரிக்கை..!!

மகளிர் உரிமைத்தொகை திட்டம் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், உரிமைத்தொகை வழங்கும் தேதியான 15இல் இருந்து வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. சுருக்கமாக சொல்லப்போனால், தகுதியுள்ள ஒரு மகளிர் கூட விடுபட்டுக்கூடாது என்பதற்காகவே, இந்த விஷயத்தில் அரசு விழிப்புடன் இருப்பதாக சொல்கிறார்கள். அதனால்தான், இதுவரை உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, மாற்றுத்திறனாளிகள் பலர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்தனர். ஆனால், அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 கிடைக்கவில்லையாம். காரணம், இவர்கள் எல்லாருமே 4 சக்கர வாகனத்தை வைத்திருப்பதாக கூறி, மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 2 சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, வாகனத்தின் கூடுதலாக 2 சக்கரங்கள் இணைக்கப்படும்.

அதனால், இதனை 4 சக்கர வாகனங்களாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் நிலையில், அதனை நிஜமாகவே கார், வேன் போல “4 சக்கர வாகனம்” என்று கருதி, மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டுவிட்டதாம். எனவே, இது சம்பந்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் அதிகமாகி வருகின்றன.

Chella

Next Post

’அடுத்த டார்கெட் இந்த 3 இடங்கள் தான்’..!! வெதர்மேன் கொடுத்த அப்டேட்..!!

Tue Dec 19 , 2023
தென் மாவட்டங்களை தொடர்ந்து 3 பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தூத்துக்குடி, திருநெல்வேலியில் காலத்திற்கும் நின்று பேசும் வரலாற்று சிறப்புமிக்க மழையை கொடுத்த காற்றழுத்த சுழற்சி அரபிக் கடலுக்கு சென்றுவிட்டது. இரண்டு நாட்களில் அது மறைந்துவிடும். தற்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வேதாரண்யம், கோடியக்கரை, ராமேஸ்வரம் ஆகிய […]

You May Like