நேற்றைய தினம் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் நேற்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் தெரிவித்ததாவது, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தேதி தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கப்பட்டுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நோய் தொற்றால் சற்று தாமதமாக ஆரம்பமானது. ஆனாலும் நோய் தொற்று பாதிப்பானது சற்று குறைந்ததால் திட்டமிட்டபடி பொது தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களும் தேர்வை மிகவும் சிறப்பாக எழுதி முடித்திருக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில்தான் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் மாதம் இரண்டாம் தேதியும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் மாதம் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பதை பொறுத்து பல்லுகள் திறக்கும் தேதியில் மாற்றம் உண்டாகலாம் என்று சொல்லப்படுகிறது. அதே போன்று விடுமுறை நாட்களில் மாணவச் செல்வங்கள் யாரும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி இருக்கிறார்.