fbpx

பத்திரப் பதிவுத்துறையில் இப்படி ஒரு வசதியா..? எல்லாம் முடிஞ்சு மறுநாளே..!! சூப்பர் அறிவிப்பு..!!

வில்லங்க சான்றிதழ்களின் முக்கியத்துவம் என்னென்ன? வில்லங்க சான்றிதழில் பிழைகள் இருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவோர், அதற்கு முன்பு சட்டப்படி அந்த இடங்கள் இல்லாமல் சரியானவைதானா? சம்பந்தப்பட்ட சொத்துக்கு முந்தைய உரிமையாளர்கள் இருக்கிறார்களா? அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா? என்பதை அறிய வேண்டும். இதை தெரிந்து கொள்ளத்தான் வில்லங்க சான்றிதழ்களை பெறுவார்கள். இதன்மூலம், விலைகொடுத்து வாங்கப்போகும் அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்தான் வில்லங்க சான்றிதழாகும். அதுமட்டுமின்றி, இந்த சொத்து, இதற்கு முன்பு யார் யாரிடம் இருந்தது? யார் யார் அனுபவித்தார்கள்? என்கிற விவரங்களும் பதிவாகியிருக்கும்.

முன்பெல்லாம் இந்த சான்றிதழை பெற வேண்டுமானால், பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை.. செல்போனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.. தமிழக பதிவுத்துறையானது, இதற்காகவே வெப்சைட்களில் எளிய முறையை வகுத்துள்ளது. இதற்கென யாருக்கும் பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. ஆன்லைனிலேயே வில்லங்கத்தை பார்க்க முடியும் என்பதால், நேரமும் மிச்சமாகிறது. எனவே, https://tnreginet.gov.in/portal/ என்ற வெப்சைட்டிற்குள் சென்று, E-services> Encumbrance Certificate > View EC என்ற லிங்க்கை கிளிக் செய்தால், வில்லங்க சான்றிதழை பார்க்கலாம்.

அதேபோல, வீடு, நிலம் தொடர்பான பத்திரப்பதிவு செய்துமுடித்துவிட்டால், சில நாட்கள் கழித்தே, அதன் உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வில்லங்க விவரத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போது, இதனையும் பதிவுத்துறை எளிமைப்படுத்தியுள்ளது. அந்தவகையில், பத்திரப்பதிவு முடிந்த மறுநாளே, வில்லங்க விவரங்களை ஆன்லைனில், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், பத்திரப்பதிவு செய்தவரின் செல்போன் நம்பருக்கு எஸ்எம்எஸ் மூலம் ஒரு லிங்க் அனுப்பப்படும். அந்த குறியீட்டில் சென்றால், வில்லங்க சான்றிதழ் விவரங்களை அறியலாம்.

அதேபோல, வில்லங்க சான்றிதழில் பிழைகள் ஏதாவது இருந்தால், அதை திருத்த உரிய விண்ணப்பம் பெறப்படும். அதன் அடிப்படையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வரைவு திருத்த விவரங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லும். அங்கு தான் இந்த பிழைகள் திருத்தப்படும்.

Read More : மாதந்தோறும் நல்ல வருமானம் பெற எவ்வளவு ரூபாய் முதலீடு செய்யலாம்..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

What is the Importance of Animal Certificates? Do you know what to do if there are errors in the certificate?

Chella

Next Post

கெஞ்சிய காதலன்..!! 11ஆம் வகுப்பு மாணவி செய்த காரியத்தை பாருங்க..!! அதிர்ச்சி ஆபாச வீடியோ..!!

Fri Jun 28 , 2024
A young man has been arrested in Bokso for threatening to publish a nude video of a girl he fell in love with on social media through Instagram.

You May Like