fbpx

சோளத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?… இதனை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்!

சோளம் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நாட்டில் வகாரி, ஜோவர், ஜோலா, ஜோன்தலா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் சோளத்தை குறிப்பிடுகிறார்கள். இதனை வைத்து ரொட்டி, தோசை ஆகிய உணவு வகைகளை தயாரித்து உண்ணலாம். இந்தியாவில் பஞ்சம் நிலவியப்போது சோளம் தான் பலரின் பசியை போக்கியது. சோளம் உண்பதால் உடலுக்கு தேவையான நிறைய புரதச்சத்து கிடைக்கும். ஆனால் எல்லா சோளத்தையும் நம்மால் உண்ண முடியாது. கிட்டத்தட்ட 30 சோள வகைகள் உள்ளன. அதில் ஒரு வகையை தான் மனிதர்கள் உண்ணமுடியும். உலகிலே 5ஆவது மிக முக்கிய தானியமாக கருதப்படுகிறது.

கோதுமை, பார்லி, கம்பு ஆகிய தானியத்தில் குளூடின் என்ற புரதம் இருக்கும். இது செலியாக் என்ற நோய் பாதித்தவர்களின் உடலுக்கு தீமை செய்யும். ஆனால் சோளம் அப்படியில்லை. இதில் பசையம் போன்ற குளூடின் இல்லை. கோதுமைக்கு பதில் சோளத்தை சாப்பிட்டால் வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், உடல் சோர்வு, தலைவலி கூட குறையும். சோளத்தை உண்பது நம்முடைய செரிமான மண்டலத்திற்கு ஆரோக்கியமான பலன்களை தரும்.

நார்ச்சத்து மிகுந்து காணப்படும் சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் குடல் இயக்கம் மேம்படும். இதனால் தீராத மலச்சிக்கல் பிரச்சனை கூட தீர்க்கப்படுகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்க சோளம் உதவுகிறது. இதய நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க சோளம் உண்ணுங்கள். உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தங்களுடைய உணவில் சோளத்தை சேர்க்கலாம்.

சோளத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட் பீனோலிக் அமிலம், ஆந்தோசியானின்ஸ், போலிகோசானோல் மற்றும் பைட்டோஸ்ரால்ஸ் ஆகிய பல பைட்டோகெமிக்கல் காணப்படுகின்றன. இந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் உங்களது உடல் வீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். ஏனென்றால் நாள்பட்ட வீக்கமே நம் உடலில் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் வர காரணியாக உள்ளது. கருப்பு, சிவப்பு, பழுப்பு ஆகிய நிற சோளதை பிற தானியங்களுடன் ஒப்பிடும்போது மூன்று முதல் 4 மடங்கு அதிகமான ஆந்தோசியானின்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

குறைந்தளவு கிளைசாமிக் குறியீடு உள்ளதால் சோளம் நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுக்கு நார்ச்சத்து, புரதச்சத்து அதிகளவில் கிடைக்கிறது. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியமாக வைக்கிறது. சோளத்தில் நமது உடல் நலனுக்கு தேவையான வைட்டமின் பி, போலேட் ஆகிய சத்துக்கள் காணப்படுகின்றன. தினமும் சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

Kokila

Next Post

இவர்களுக்கு மட்டுமே மின்சார கட்டணம்‌ உயரும்‌...! எவ்வளவு தெரியுமா...? தமிழக முக்கியமான அறிவிப்பு...!

Fri Jun 9 , 2023
தொழில்‌ அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்‌ ஒன்றிக்கு 13 பைசா முதல்‌ 21 பைசா வரை மின்கட்டணம்‌ உயரும்‌ என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு விகிதம்‌ மறுஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர்‌ மாதத்தில்‌ கட்டணம்‌ உயர்த்தப்பட்ட நிலையில்‌, 2022 ஏப்ரல்‌ மாதத்தின்‌ விலைக்‌ குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட்‌ மாதத்தின்‌ விலைக்‌ குறியீட்டு எண்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்பட்டது. இதனால்‌ […]

You May Like