fbpx

மதுரை முத்துவுக்கு இப்படி ஒரு நிலைமையா..? 2-வது மனைவியையும் பிரிகிறாரா..? இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

மதுரை முத்துவின் மனைவி நீத்து இன்ஸ்டாகிராம் போட்டுள்ள பதிவால் இருவரும் விவாகரத்து பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் பல வருடங்களாக நகைச்சுவை மன்னனாக கலக்கிக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. ஸ்டாண்ட் அப் காமெடி செய்வதில் கில்லாடியான இவர், கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தாண்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் குக்காக இருந்து பின்னர் கோமாளியாக மாறினார். நகைச்சுவை மூலம் பலரை சிரிக்க வைத்த மதுரை முத்துவின் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று. இவர் லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் பிறக்க, தன்னுடைய குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார் மதுரை முத்து.

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் மதுரை முத்துவின் மனைவி லேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவியின் மறைவுக்கு பின் திருமணமே வேண்டாம் என மதுரை முத்து இருந்தாலும், குழந்தைகளுக்காக இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேர்ந்தது. மதுரை முத்து லேகாவின் நெருங்கிய தோழியான நீத்து என்கிற பல் மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் நீத்து மூலம் மதுரை முத்துவுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

இரண்டு மகள், மகன், மனைவி என மதுரை முத்து… அண்மையில் கட்டி குடியேறிய பிரமாண்ட வீட்டில் வசித்து வந்தார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலானதோடு பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நீத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ந்து சோகமான பதிவுகளையே வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, தற்போது நீத்து வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் “எனக்கு என்று ஒரு உயிர் வேண்டும், அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும். அவருக்காகவே நான் பொட்டு வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறேன் என்று கண்ணீருடன் பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்த பதிவு தான் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மதுரை முத்துவின் மனைவி நீத்து அவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறாரா? என்றும், இருவரும் விவாகரத்து பெற போகிறார்களா? என்றும் பலர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

Read More : ’தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி’..!! ஆந்திர அரசியலை திருப்பிப் போட்ட அந்த கைது..!!

English Summary

According to a post posted by Madurai Muthu’s wife Neethu on Instagram, the two are getting divorced.

Chella

Next Post

BREAKING | திடீர் திருப்பம்..!! மத்தியில் ஆட்சி அமைக்கிறது INDIA கூட்டணி..!! பக்கா பிளான் போட்ட காங்கிரஸ்..!!

Tue Jun 4 , 2024
The INDIA alliance is planning to form a government at the center by combining both Chandrababu Naidu and Nitish Kumar.

You May Like