இந்தியாவில் மளிகைக் கடைகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில், புதிய போட்டியாளர்கள் சந்தையில் களமிறங்கியுள்ளனர்.
மளிகைக் கடைகளின் ஆதிக்கம் குறையும் வகையில் என்ன நடக்கிறது..? கடந்த சில ஆண்டுகளில் ரிலையன்ஸ் ரீடைல், டிமார்ட், மோர் சூப்பர்மார்ட் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய கடைகளை அதிகரித்து வருகின்றன. ஆனால், சத்தமில்லாமல் டெக் துணையுடன், பல்வேறு சிறிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் நிறுவனங்கள் திறக்கப்பட்டு பெரும் வர்த்தக பாதிப்பை மளிகைக் கடைகளுக்கு ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
சிறிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் நிறுவனங்களின் வருகை FMCG துறையில் புதிய புயலே உருவாகியுள்ளது. இந்த சிறிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் நிறுவனங்கள் மளிகை கடைகள் போல் அல்லாமல் பெரிய கடைகள் அளிக்கும் அதே self-service சேவை அளிக்கும் காரணத்தாலும் ஆப், ஆன்லைன் டெலிவரி என பல சேவைகளை அளிக்கும் காரணத்தாலும் மக்கள் மளிகை கடைகளுக்குச் செல்வதை குறைத்து வருகின்றனர்.
உதாரணமாக குஜராத்தைத் தளமாகக் கொண்ட ஃப்ரெண்டி (Frendy), தெலங்கானாவின் சூப்பர் கே (SuperK), பீகாரின் ஆப்னா மார்ட் (Apna Mart), ராஜஸ்தானின் மளிகை கிங் (Kirana King) போன்ற சிறிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் நிறுவனங்கள் தற்போது FMCG துறையின் மொத்த ரீடைல் விற்பனையில் 4% பங்கைக் கொண்டுள்ளன. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கொரோனா தொற்றுக்கு முன்பு இது 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது..
பாரம்பரியமான மளிகை கடைகளில் மக்கள் நேரில் சென்று பொருட்களைக் கேட்டு வாங்கி, பணத்தைக் கொடுக்கும் செயல்முறை கொண்டுள்ளது. ஆனால், இந்த புதிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் நிறுவனங்கள் ஆர்டர்கள் மற்றும் டெலிவரிக்கான டிஜிட்டல் ஆப் மூலம் செய்கிறது. நேரில் செல்வோருக்கு செல்ப் சர்வீஸ் சேவை அளிக்கிறது. இதேபோல் விற்பனைக்கு வாங்கும் பொருட்கள் அனைத்தும் பெரும் தொகுதியாக வாங்கும் காரணத்தால் விலையும் மலிவாக பெற முடியும்.
இதனால் இத்தகைய நிறுவனங்கள் உடன் மளிகை கடைகள் போட்டிப்போட முடியாது. இந்த சிறிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சுமார் 10,000 கடைகள் திறக்கும் இலக்குகளை கொண்டுள்ளது. இதேபோல் டெக் சேவை மற்றும் டிஜிட்டல் வர்த்தக வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் காரணத்தால் மளிகை கடைகளை ஓரம்கட்டுவது மட்டுமின்றி, ரிலையன்ஸ், டிமார்ட், மோர் போன்ற பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக உருவெடுக்கக் கூடும்.
உதாரணமாக, குஜராத் மாநிலத்தில் அசத்தி வரும் Frendy வர்த்தகத்தைத் துவங்கி வெறும் 4 ஆண்டுகளில் 25 கடைகளையும், 2000 மைக்ரோ கடைகளையும் கொண்டு அசத்தி வருகிறது. இதேபோல் Kirana King மற்றும் SuperK ஆகியவை 100 கடைகளையும், அப்னா மார்ட் 50 கடைகளையும் திறந்துள்ளது. இதேபோன்ற கட்டமைப்பு தான் சர்வதேச அளவில் பெரும் வெற்றி அடைந்துள்ளது smaller is bigger என்ற அடிப்படையில் 7-Eleven ஜப்பான், தைவான், தாய்லாந்து, சிங்கப்பூரில் அசத்தி வருகிறது. இதேபோல் ஜப்பானில் லாசன், மெக்சிகோவில் oxxo ஆகிய பிராண்டுகளும் அசத்தி வருகிறது.
Read More : புதிதாக யாருக்கெல்லாம் ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கும்..? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!