பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது. தினம் தினம் புது புது காரணங்களுக்காக சண்டை வாக்குவாதம் என விறுவிறுப்பாக செல்கிறது. இந்த முறை இரண்டு வீடுகள் என்பது கூடுதல் சிறப்பாகும். ஒவ்வொரு வாரமும் வீட்டு தலைவரை குறைவாக கவர்ந்த போட்டியாளர்களை இரண்டாவது வீடான ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில், இந்த வாரம்தான் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பிக்பாஸ் வீட்டிற்கு இடையிலான பிரிவு மோதலை ஏற்படுத்தி வருகிறது. முதல் வாரத்திலேயே அனன்யா ராவ், பவா செல்லதுரை ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். இதனால் இந்த வாரம் யாரும் வீட்டை விட்டு வெளியேறப்போவதில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், பிக்பாஸ் வீட்டில் புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வருவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7இல் VJ அர்ச்சனா வைல்ட் கார்ட் மூலம் விரைவில் என்ட்ரி ஆகப்போகிறார் என தகவல் கிடைத்துள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.