fbpx

இந்த செயலி உங்கள் மொபைல்ல இருக்கா?? இல்லைனா உடனே பதிவிறக்கம் செய்க..!

தமிழ்நாடு அரசின் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் உருவாக்கப்பட்ட ”சென்னை பஸ்” செயலியானது, தாங்கள் சேரும் இடம் அறியாமல் சிரமப்படும் மக்களுக்கு உதவும் வகையில் பேருந்தின் நிகழ்நேர இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மே 4 2022 அன்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநகர பேருந்துகளின் தற்போதைய இருப்பிடத்தையும், அடுத்த பேருந்த நிலையத்தையும் ,அது எத்தனை மணி நேரத்தில் வந்து சேரும், மேலும் அது சென்று சேரும் இருப்பிடத்தையும் இதில் தேடுவதன் மூலம் எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் சேரும் இடத்தினை அடைய முடிகின்றது.இந்த செயலியானது 3233 பெருநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கத்தை கண்கானிக்க உதவும். பேருந்து வருகை நேரம் மற்றும் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றையும் அறிந்துகொள்ளலாம். இந்த செயலியானது மக்கள் எல்லா இடங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லாமல் செல்வதற்கு உதவும்.

இதில் ”பஸ் ரூட்” விருப்பத்தை தேர்வு செய்து, அதில் பேருந்து எண்ணை உள்ளிடும்போது இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காட்டப்படும் . பயனர் அந்த பாதை விருப்பத்தையும் தேர்வு செய்து அவை வந்து சேரும் நேரத்தையும் அறிந்துகொள்ளலாம். அது மட்டும் அல்லாது அவசர நிலை ஏற்பட்டால் பயணிகள் தங்களுக்கு தெரிந்தவர்களின் தொலைப்பேசி எண்ணிற்கோ அல்லது காவல் துறை அதிகாரிகளுக்கோ பேரிடர் சமிக்ஞைகளை அனுப்பலாம். இச்செயலியின் வலது மூலையில் வைக்கப்பட்டுள்ள SOS பட்டன் மூலமாக அவசர கால சமிக்ஞைகளை உடனடியாகவும் காவல்துறைக்கும் அனுப்பலாம் .

பிறகு “எங்களை தொடர்புகொள்ளவும்” என்பதன் மூலமாக தங்களது புகார்களையும் தெரிவித்துக்கொள்ளலாம். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் செயல்படும். ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமே தற்போது உபயோகப்படுத்த முடியும். விரைவில் சென்னைக்கு அடுத்தபடியாக இச்சேவையை பல இடங்களில் விரிவுபடுத்த உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கபடுத்தபட்டுள்ளது.

Maha

Next Post

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த பகுதிகளில் லேசான மழை பொழிய வாய்ப்பு …! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு……!

Wed Aug 2 , 2023
நேற்றைய தினம் வட கிழக்கு வாங்க கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை வங்கதேசம் கடல் பகுதியில்கரையை கடந்தது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக, ஒவ்வொரு பகுதிகளில் இயல்பிலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 8ம் தேதி வரையில் தமிழகம் புதுவை […]

You May Like