சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வனிதா, தற்போது KFC சிக்கன் குறித்து போட்டுள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
KFC-யில் ஆசை ஆசையாய் சாப்பிட சென்று அப்செட் ஆனதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் வனிதா. அதன்படி, ஹைதராபாத்தில் KFC-க்கு சாப்பிட சென்றபோது, அங்கு கொடுத்த சிக்கனை பார்க்கும்போது மிகவும் சிறியதாக இருந்ததால் இது கோழியா? இல்ல காக்காவா? என கேள்வி எழுப்பி உள்ளார் வனிதா. அதுமட்டுமல்ல அந்த சிக்கனை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதிருப்தி தெரிவித்துள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களுடன் மல்லு கட்டிய வனிதா, கடைசியில் பிரபல ஃபுட் பிராண்ட் நிறுவனமான KFC-யை வம்புக்கு இழுத்திருக்கிறார்.
இவரைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருந்த KFC நிறுவனமும் வாயாடி கிட்ட வம்பு எதற்கு என்று சரணடைந்து விட்டது. ‘உங்களுக்கு இப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததற்காக வருந்துகிறோம்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது. இதன் பிறகு வனிதாவும் இதைப்பற்றி பெரிதாக கொள்ளாமல் விட்டுவிட்டார். ஒருவேளை KFC மட்டும் அப்படி வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், நிச்சயம் இதை வைத்தே பல மாதம் அவருடைய யூடியூப் பக்கத்தில் மென்று தின்று இருப்பார்.