நீட் தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிட தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்வினை சுமார் 17.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிட தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப விடைக்குறிப்பு விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் விவரங்களை தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.