குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை தங்கத்தின் தேவை நிராகரிக்கப்படாத ஒன்றாக உள்ளது. ஆனால், தற்போது தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருவதால் மக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆண்களை விட பெண்களே தங்கத்தின் மீது அதிகம் அக்கறை உள்ளவர்களாக இருப்பதால் தினமும் விலையை கண்காணித்து வருவதும் பெண்களாகவே உள்ளனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5,455 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 80 ரூபாய் உயர்ந்து 43,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5,470 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 160 ரூபாய் உயர்ந்து 43,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், இன்று வெள்ளி விலை, கிராம் ஒன்று 75.20 ரூபாயாகவும் கிலோ ஒன்று 75,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.