விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அதிலும் சனி, ஞாயிறு கிழமைகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்து சண்டை சச்சரவுமாக தான் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து பவா செல்லதுரை தாமாகவே வெளியேறினார். இந்த வாரத்தில் எந்த போட்டியாளர் வெளியேற போகிறார் என்று எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் விஜய் வர்மா வெளியேறுவர் என்று தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.