மலையாளத்தில் கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் அருண் மற்றும் ரோஷினி வெளியிட்டோர் முதலில் இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து இந்த தொடர் மிகப்பெரிய ஹிட் ஆக ஓடிக்கொண்டிருந்தது.
அதன் பிறகு ரோஷினி ஒரு சில காரணங்களை முன்வைத்து இந்த தொடரில் இருந்து விலகிச் சென்றதால் அவருக்கு பதிலாக வினுஷா நடித்து வருகிறார். தற்சமயம் இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகிவிட்டது எப்படி முடிய போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த தொடரை அடுத்து தற்சமயம் ஒரு புதிய தொடர் மல் தன்னுடைய கிளைமாக்ஸை எட்டி விட்டதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர். சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஈரமான ரோஜாவே 2 முடிவுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் தற்சமயம் தான் கதைக்களத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. ஆகவே இது முழுக்க, முழுக்க வதந்தியே என்று நெடுந்தொடர் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.