கடந்த திங்கட்கிழமை உலகையே உலுக்கிய பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதிகளை தாக்கியது. அதிகாலை நேரம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 24,000 அதிகமானோர் பலியானதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 55,000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவில் பதிவான இந்த பயங்கரமான நிலநடுக்கம் உலகை உரையச் செய்தது என்றால் மிகையாகாது.
இந்நிலையில் இந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் இதற்குப் பின்புறமாக அமெரிக்கா செயல்பட்டதாகவும் இணையதளங்களில் செய்தி வெளியாகி புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் பலியான இந்த சம்பவத்திற்கு பின்புலமாக இருந்து இயக்கியது அமெரிக்கா தான் என வெளியான தகவலால் உலகெங்கிலும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல்களின்படி அமெரிக்கா புதிய வானிலை ஆயுதம் ஒன்றை கண்டுபிடித்து இருப்பதாகவும் எச்ஏஏஆர்பி என்ற வானிலை ஆயுதம் தான் இந்த அதி பயங்கரமான நிலநடுக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால் தான் துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதிகளில் இந்த பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெருமளவில் சிரியா மற்றும் துருக்கி நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே போரினால் நாசம் அடைந்துள்ள சிரியா இந்த இயற்கை பேரிடராலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இது தொடர்பாக துருக்கியில் இருந்து வரும் தகவல்களின்படி இந்தப் பூகம்பம் இயற்கையாக நிகழ்ந்தது தான் என்றும் சேர்க்கையாக எந்த தூண்டலும் இல்லை என அங்குள்ள இயற்கை பேரிடர் கழகம் அறிவித்திருக்கிறது.