ஆதார் என்பது அரசு ஆவணங்களில் முக்கியமான ஒன்றாகும். வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் சிம்கார்டு எடுப்பது, கல்லூரியில் சேருவது, வீடு வாடகைக்கு எடுப்பது என எல்லாவற்றுக்கும் ஆதார் இப்போது கட்டாயம்.
ஆனால் சில மோசடி நபர்கள் போலி ஆதாரை வழங்கி மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் சில இடங்களில் அரங்கேறி வருவதால், போலி மற்றும் உண்மையான ஆதார் அட்டைக்கு இடையிலான வேறுபாட்டைப் நாம் புரிந்துகொள்வது அவசியம். சரி, உங்கள் ஆதார் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கண்டறிய உதவும் சில வழிமுறைகள் இதோ…
உங்களிடம் உள்ள ஆதார் எண் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைச் சரிபார்க்க விரும்பினால், UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar என்ற தளத்திற்கு செல்லவும். இந்த இணைய பக்கம் தோன்றியதும் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடவும். எண்ணை பதிவிட்டதும் கேப்சா கோடினை டைப் செய்து, சமர்பிக்கவும். இப்போது உங்கள் ஆதார் எண்ணுடன், பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட திரையில் பிரதிபலிக்கும். இந்த விவரங்கள் அனைத்தும் காட்டப்பட்டால், உங்களிடம் உள்ள ஆதார் எண் உண்மையானது என அர்த்தம்.