fbpx

உங்கள் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா?… அலட்சியம் வேண்டாம் கவனமாக இருங்கள்!

குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று பெற்றோர்கள் யோசித்திருக்க மாட்டார்கள். சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடும். குழந்தைகளின் நரம்பில் ஏதேனும் குறை இருந்தாலும் இந்த சிறுநீர் கழிக்கும் அறிகுறிகள் உண்டாகும். எனினும் இது தீவிரமானனவை அல்ல. நீங்கள் இதை உணர்ந்து கவனித்தாலே குழந்தைகள் சரியாக கூடும். குழந்தைகளுக்கு காபின் நிறைந்த உணவுகளை தருவதால் சிறுநீர் அதிகமாக வெளியேற காரணமாகிறது. ஒவ்வாமை பொருட்கள் குழந்தைகளுக்கு பதட்டத்தை உண்டாக்கி சிறுநீர் வெளியேற வைக்கும்.

பொதுவாக பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள். அதனால், குழந்தைகளுக்கு தரும் பசும்பால் அல்லது ஆவின் பாலில் தண்ணீர் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். டின் பவுடர் பாலாக இருந்தால் ஒரு கரண்டி பவுடருக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் சேர்த்தால் போதும். பொதுவாக, 4 கிலோ எடையுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு வேளைக்கு 4 அவுன்ஸ் பால் கொடுத்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள். குழந்தைகளை சீரான இடைவெளியில் அதாவது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும். பிறகு படிப்படியாக அதிகரித்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பது வழக்க படுத்தலாம். குறிப்பாக காபின் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது தவிர்க்க வேண்டும். இதை அனைத்தையும் மீறி குழந்தை நொடிக்கு ஒரு முறை சிறுநீர் கழித்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

Kokila

Next Post

அடடே நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…..? நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்…..?

Fri Aug 4 , 2023
பொதுவாக நெல்லிக்காயிலும் சரி, தேனிலும் சரி, அதிக அளவிலான நன்மைகள் இருப்பதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் நெல்லிக்காய் பல்வேறு விதமான நன்மைகளை உடலுக்கு வழங்கும். ஆனாலும், அதனை பொதுமக்கள் யாரும் பெரிதாக விரும்பி சாப்பிடுவதில்லை. நெல்லிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக ஆயுர்வேத மருத்துவர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது நெல்லிக்காய் மற்றும் தேன் உள்ளிட்டவற்றை கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் காணலாம். மாதுளைப்பழத்தை விட நெல்லிக்காயில் […]

You May Like