முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை மீண்டும் எப்படி திறப்பது என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கின்றனர். சில நேரங்களில் ஒரு வங்கிக் கணக்கை பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். அதனால் அந்த வங்கிக் கணக்கு முடக்கப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் வங்கி வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் இருப்பார்கள்.
தற்போது அவ்வாறு முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை மீண்டும் எப்படி திறப்பது என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்களுடைய KYC விவரங்களை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பான் கார்டு படிவம் 60 அல்லது வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ஏதாவது சமமான ஆவணம் இல்லை என்றால், அவர்களின் கணக்கு முடக்கப்படும். இப்படியான நிலையில் மீண்டும் KYC சரிபார்ப்பை முடித்தால் அந்த கணக்கு மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.