வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன. சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கயத்தாறு, நாங்குநேரி இடையே தேசிய நெடுஞ்சாலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் 14 விபத்துகள் நடந்துள்ளன. வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன. சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பால தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் விரிவான பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.