fbpx

ஆபாச படம் பார்ப்பது குற்றம் இல்லையா?… இது போன்ற கருத்தை ஒரு நீதிபது கூறுவது கொடுமை!… Supreme Court கண்டனம்!

Supreme Court: ஆபாச அபடங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறி இருந்த நிலையில், இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் மீது அம்பத்தூர் காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்திருந்தனர். தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் விசாரணை ஆனது கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படாது; அதனை பிறருக்கு அனுப்புவதுதான் சட்டப்படி குற்றம் என கூறி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் 90’ஸ் கிட்ஸ்கள் எப்படி புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனரோ, அதே போல் 2’கே கிட்ஸ்கள் ஆபாச படங்களுக்கு அடிமை ஆகி உள்ளனர். மொபைல் போன் உள்ளிட்ட எலட்ரானிக் கேஜட்டுகளால் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். ஒரு பொத்தானை அழுத்தினால் எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி எல்லா தகவல்களையும் பெற முடிகிறது. 10இல் 9 டினேஜ் பருவத்தினர் ஆபாச படங்களை பார்ப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.

எனவே இன்றைய இளைஞர்கள் மீது பழி சொல்வதற்கு பதிலாக, இந்த கெட்ட பழக்கத்தில் இருந்து இளம் பருவத்தினரை மீட்க அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும். ஆபாச படங்களை பார்ப்பதால் இளம் பருவத்தினர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இது தொடர்பாக பள்ளியில் இருந்தே விழிப்புணர்வு வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறி இருந்தார்.

இளைஞரை விடுதலை செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ’ஒரு நீதிபதி எப்படி இது போன்ற கருத்தை சொல்ல முடியும்’ இது கொடுமையானது என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கும், பதில் மனுதாரருக்கும் பதில் அளிக்க அவகாசம் வழங்கிய நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை 4 வார காலத்திற்கு பின்னர் மீண்டும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Readmore:பெரம்பலூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் பாரிவேந்தர்..!! தாமரை சின்னத்தில் போட்டி..!!

Kokila

Next Post

Ration | ரேசனில் பொருட்கள் கிடைக்காது..!! போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

Tue Mar 12 , 2024
தமிழ்நாடு அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, ரேஷன் கடை ஊழியர்களின் பங்கு அபரிமிதமானது. தமிழக அரசும், பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு, ஊக்கத்தொகைகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அதாவது, கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல, பண்டிகை நாட்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை […]

You May Like