fbpx

குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.520 குறைந்த தங்கம் விலை…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அந்த வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த முதலே தொடர்ந்து தங்கம் விலை கடுமையாக உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ. 4,740-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.62,50-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,500-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

வேலூரில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. சந்தேகத்தால் காதலர் செய்த வெறிச்செயல்..

Wed Jul 6 , 2022
வேலூர் அருகே திருவலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை, மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.. வேலூர் அருகே உள்ள கிராமத்தில் சதீஷ் குமார், அதே பகுதியை சேர்ந்த 18 வயதான பெண் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.. இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வரும் நிலையில், அப்பெண் வேறு ஒரு நபரை காதலிப்பதாக சதீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. இந்நிலையில் திருவலம் […]

You May Like