fbpx

ஐ.நா.வுடன் இணைந்து செயல்படும் பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல்..! 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

காசாவில் ஐ.நா.வுடன் இணைந்து செயல்படும் பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல். இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம்7ஆம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் 50 நாட்களை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரு தினங்களுக்கு முன் அறிவித்தார், இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றது. அதோடு, 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது.

4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து நடத்தும் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசாவின் பிற பகுதிகளில் வன்முறை மற்றும் தீவிர குண்டுவெடிப்பில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கவைக்கப்பட்ட இந்த பள்ளியில் தாக்குதல் நடத்தியதில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் மற்றும் மின் உற்பத்தியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா கூறுகையில், “மருத்துவமனை தீவிரமான குண்டுவீச்சுக்கு உட்பட்டுள்ளது, மேலும் கட்டிடத்தின் பெரிய பகுதிகள் குறிவைக்கப்படுகின்றன” என்று கூறினார்.

Kathir

Next Post

இனி இவர்களும் எம்பிபிஎஸ் படிப்பில் சேரலாம்..!! தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

Fri Nov 24 , 2023
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ‘நீட்’ தகுதித் தேர்வு தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பில், “12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, மருத்துவ படிப்புக்கு தேவையான இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கூடுதல் பாடமாக படித்தவர்களும் இனி இளநிலை நீட் எழுத அனுமதிக்கப்படுவர். அவ்வாறு கூடுதல் பாடத்தில் தேர்ச்சி பெறுவோருக்கு […]

You May Like