காஸா பள்ளி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இது ஹமாஸ் வளாகமாக பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் கூறியது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை நிராகரித்து விட்டார். மேலும் 14 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் இப்போது தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் தான் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் மே 26 ஆம் தேதி குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன
இந்நிலையில், மத்திய காசாவில் ஒரு பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்தப் பள்ளிக் கூடத்தை தங்கள் புகலிடமாக ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. மத்திய காசாவில் புதிய வான் மற்றும் தரைவழி நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேலின் கிட்டத்தட்ட எட்டு மாத தாக்குதலின் விரிவாக்கத்தை இந்த தாக்குதல் குறிக்கிறது.
Read more ; தந்தை இறந்து ஒரு வாரம் ஆச்சு..!! ஆனா இப்போ தான் தகவல் வந்துச்சு..!! மனமுடைந்துபோன பிக்பாஸ் ஷெரின்..!!