அல் ஜெசிராவுக்கு இஸ்ரேலில் தடை விதித்தது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கத்தார் நாட்டின் தோஹா நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருவது அல் ஜசீரா தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சி உலகின் பல்வேறு நாடுகளில் கிளை அமைத்து, ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் நடந்து கொள்வதாக அல் ஜசீரா மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறியுள்ளார். ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களின் முக்கிய கருவியாக அல் ஜசீரா இயங்கி வருவதாக கூறினார்.
முன்னதாக மத தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி சவுதி, எகிப்து போன்ற நாடுகளில் அல் ஜசீராவிற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இஸ்ரேலில் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பத்திரிகையாளர்களின் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கேபிள் தொடர்புகளையும் துண்டிக்க இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.