Gaza: வடக்கு காசா பகுதியில் ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலிய எல்லை வழியாக ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்க காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது.
அந்தவகையில், வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியா முகாம் மீது நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 21 பெண்கள் உட்பட 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இதில், 85க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் சிலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ளது. குண்டுவெடிப்பு தாக்குதலில் கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியவர்களால் மேலும் பலி எண்ணிக்கை 50ஆக அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 42,500 ஆக உயர்ந்துள்ளதாக காசாவை தளமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Readmore:முதல்வரே நீங்க செய்வது மலிவான அரசியல்… CM ஸ்டாலின் கருத்துக்கு ஆளுநர் பதிலடி…!