Gaza Hospital: காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனை அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் மற்றும் தீவைத்து எரித்த சம்பவத்தால் நோயாளிகள் வெளியேற்றப்பட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வான்(Kamal Adwan Hospital) மருத்துவமனை மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதோடு நூற்றுக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியுள்ளது. மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்ட இந்த சம்பவத்தை ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனை ஊழியர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சக இயக்குனர் முனீர் அல் பர்ஷ்(Munir al Bursh) வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் படைகள் மருத்துவமனைக்குள் நுழைந்து அதை தீயிட்டு எரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய ராணுவம் மறுத்துள்ளது. அத்துடன் மருத்துவமனை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் செயல்பாட்டுத் தளமாக செயல்படுவதாகவும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க இஸ்ரேலிய இராணுவத்தின் இந்த வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக, நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலிய தாக்குதல்களில் காசா நகரில் உள்ள ஒரே வீட்டில் 15 பேர் உட்பட 25 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் மற்றும் சிவில் அவசர சேவை தெரிவித்தது.
Readmore: அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் பச்சை நிற ஆடைகள் அணிவது ஏன்?.