fbpx

இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்… அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

அமெரிக்காவில் படித்து வரும் கோவை மாணவி அச்சிந்தியா சிவலிங்கம், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை உடனே நிறுத்த வலியுறுத்தி உலகம் முழுவதும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர் என்பதும் அவரது சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதும் பல்கலைக்கழக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சந்தியா கோவையில் பிறந்திருந்தாலும் அமெரிக்காவின் கொலம்பஸ் நகரின் ஓகியோவில் வளர்ந்தவர். ஓகியோ பல்கலைகழகத்தில் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அவர் தற்போது பிரஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பல்கலைகழத்தில் நுழையவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹசன் சயீத் மற்றும் அசிந்தியா சிவலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலை நிர்வாகம் கூறியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,356 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77,368க்கும் மேற்பட்டோட் காயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

‘ஓடும் பேருந்தில் இருந்து நடத்துனர் தூக்கி வீசப்பட்ட சம்பவம்’ – போக்குவரத்து துறையின் அதிரடி உத்தரவு!

shyamala

Next Post

புதிய உச்சம்...! தமிழகத்தின் மின் தேவை 20,583 மெகாவாட் என்ற அளவில் உயர்வு...!

Sun Apr 28 , 2024
தமிழகத்தின் மின்சாரத் தேவை 20,583 மெகாவாட் என்ற அளவில் உயர்ந்துள்ளது. வெப்ப அலையின் கீழ் தமிழகம் தத்தளித்து வரும் நிலையில் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் மின்சாரத் தேவை 20,583 மெகாவாட் மற்றும் தினசரி ஆற்றல் நுகர்வு 451.791 மில்லியன் யூனிட் என்ற வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இருந்த மின் நுகர்வுடன் ஒப்பிடும்போது […]

You May Like