‘ஓடும் பேருந்தில் இருந்து நடத்துனர் தூக்கி வீசப்பட்ட சம்பவம்’ – போக்குவரத்து துறையின் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளையும் இரண்டு நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.  

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது.  இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.  இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது.  அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று,  அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார்.  பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதுமட்டுமல்லாமல்,  பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த தொடர் புகார்களை அடுத்து,  போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.  அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.  அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’

Next Post

கிழிந்த ரூபாய் நோட்டுகளை இனி ஈசியாக மாற்றலாம்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!

Sat Apr 27 , 2024
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், இன்னும் ரூபாய் நோட்டுகளும் அதிகளவில் புழக்கத்தில் தான் இருக்கின்றன. இதனால், பிறரிடம் இருந்து வாங்கக் கூடிய ரூபாய் நோட்டுகள் கிழிந்தோ அல்லது ஒட்டப்பட்டோ நம்மிடம் வந்துவிடும். ஆனால், அதை மாற்ற முடியாமல் பலரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். இந்நிலையில், ரிசர்வ் வங்கி சில வழிமுறைகளை கூறியுள்ளது. அதை பின்பற்றினால், உங்களிடம் இருக்கும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எளிதாக மாற்றிக் கொண்டு, புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் […]

You May Like