fbpx

அடுத்தடுத்த சாதனைகளை படைக்க தயாரான இஸ்ரோ!… மற்ற கிரகங்களுக்கும் விண்கலங்களை அனுப்ப திட்டம்!

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் சம புவிஈர்ப்பு விசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியனை பூமி சுற்றும்போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின்தொடரும். எல்-1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட புள்ளியை குறிக்கும் லாக்ரேஞ்ச் பாயிண்ட் என்ற இடமாகும். எல்-1 என்ற இடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆராய முடியும். ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை ஆதித்யா மேற்கொள்ள உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு ஆய்வுகளை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதுவரை, அமெரிக்கா, ரஷ்ய மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவை சூரியனை ஆய்வு செய்வதற்காக தனித்தனியாகவும் சில நேரங்களில் கூட்டாகவும் திட்டங்களை மேற்கொண்டுள்ளன. இப்போது இஸ்ரோ அத்திட்டங்களுக்கு இணையாக ஆதித்யா எல்1 உடன் களமிறங்கியுள்ளது.

சூரியன் மட்டுமல்ல, வேறு கோள்களுக்கும் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டம்: புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், “எங்கள் தரைக் கட்டுப்பாட்டு நிலையம் தனது பணியை சிறப்பாகச் செய்து முடித்துள்ளது. அனைத்து கருவிகளும் நன்றாக வேலை செய்தன. கடினமான கணிதக் கணக்கீடுகளும் கூட மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன” என்றார். .”

100 கிலோவுக்கும் அதிகமான எரிபொருளைக் கொண்டிருப்பதால், இந்த திட்டத்தின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கக் கூடும் என்று அவர் கூறினார். இந்த பயணத்திற்குப் பிறகு, வீனஸ், செவ்வாய், வியாழன், நெப்டியூன் மற்றும் புளூட்டோ போன்ற கிரகங்களுக்கும் விண்கலங்களை இஸ்ரோ அனுப்பும் என்று சோம்நாத் கூறினார்.

Kokila

Next Post

40 வயசுதானா?... விடை தெரியாத கிம் ஜாங் உன்னின் ரகசியங்கள்?… சர்ச்சைகளுக்கு உள்ளாகும் அதிபர்!… ஏன் இத்தனை ரகசியங்கள்!

Sun Jan 7 , 2024
கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் உள்ளன. வடகொரிய அதிபராக கிம் ஜோங் உன் தலைமையேற்று 13 ஆண்டுகள் […]

You May Like