இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)
பணியின் பெயர் : Graduate Apprentice, Diploma Apprentice, Trade Apprentice
காலிப்பணியிடங்கள் : 75
கல்வித் தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI / BE / B.Tech / Diploma in (Engineering / Commercial) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Graduate Apprentice பணிக்கு BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்றும் Diploma Apprentice பணிக்கு Diploma in Engineering / Diploma in Commercial Practice தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் Trade Apprentice பணிக்கு ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
* Graduate Apprentice – ரூ.9,000
* Diploma Apprentice – ரூ.8,000
* Trade Apprentice – ரூ.7,000
தேர்வு செய்யப்படும் முறை :
* Document Verification
* Merit List
* நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 29.04.2025, 30.04.2025, 14.05.2025, 15.05.2025, 20.05.2025, 21.05.2025ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள் : https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2025_Mar/ApprenticeAdvertisement.pdf