fbpx

இந்திய விமானப்படை அக்னிவீர் திட்டம்… திருமணம் ஆகாத நபர்கள் விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம்

இந்திய விமானப்படை அக்னிவீர் வாயு தேர்விற்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ உதவியாளர் பணிக்கு 29.01.2025 அன்று கேரள மாநிலம், கொச்சி, எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் 12-ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் பயின்றவர்கள் (திருமணமாகாத ஆண்கள் 03.07.2004 முதல் 03.07.2008-க்குள் பிறந்திருக்க வேண்டும்) கலந்து கொள்ளலாம். மேலும் மருத்துவ உதவியாளர் (மருந்தாளுநர்) பதவிக்கு இளங்கலை, டிப்ளமோ பார்மசி முடித்த 03.07.2001 முதல் 03.07.2006-க்குள் பிறந்த திருமணமாகாத ஆண்களும், 03.07.2001 முதல் 03.07.2004- க்குள் பிறந்த திருமணமான ஆண்களும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்க, திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் ஆகியோர் 01.01.2005 முதல் 01.07.2008 வரையான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கான கல்வி தகுதி 12-ம் வகுப்பு அல்லது 3 ஆண்டு பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும். இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https//agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொண்டு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27.01.2025 தேதிக்குள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.

English Summary

It has been announced that unmarried men and women can apply for the Agniveer Vayu examination.

Vignesh

Next Post

தூள்...! 100 ஆண்டு கடந்த அரசு பள்ளிகளில் வரும் 23-ம் தேதி முதல்... தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு...!

Sun Jan 12 , 2025
The Department of School Education has ordered that school-wide centenary celebrations be held in government schools that have completed a century.

You May Like