fbpx

நாளை நாடு முழுவதும் ஸ்டிரைக்…! இந்த கடைகள் எதுவும் இயங்காது… அரிசி ஆலை உரிமையாளர்கள் அறிவிப்பு…!

அரிசி மற்றும் உணவு தானியங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து நாளை நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யபட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 47வது பொதுக்கூட்டம் சண்டிகரில் கடந்த மாதம் இறுதியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் பிரண்டட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், கோதுமை மாவு, பிற தானியங்கள், தேன், பப்பாளி, உணவு தானியங்கள் போன்ற வேளாண் பொருட்களின் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​பிராண்டட் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதே சமயம் பேக் செய்யப்படாத மற்றும் பிராண்டட் இல்லாத பொருட்களுக்கு வரி இல்லை.

இந்த வரி உயர்வு குறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி மொத்த வணிகர்கள் சங்கத்தின் தலைவர் துளசிங்கம், “மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் நடத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அரிசி, கோதுமை மற்றும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்க போவதாக அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான அரசாணை வெளியிடவில்லை. மத்திய அரசு அரிசியின் மீது 5% வரியை விதிக்கும் பட்சத்தில், சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும். இதன் காரணமாக தற்போது இருப்பதை விட, 3 முதல் 5 ரூபாய் வரை அரிசியின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் வேளாண்மை சார்ந்த உணவு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும்.

மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இணைந்து, நாளை  நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 4,000 அரிசி ஆலைகள், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

Also Read: இந்தியாவில் ஆட்டத்தை தொடங்கிய குரங்கு அம்மை… 3,413 பேர் இது வரை பாதிப்பு…! எல்லாம் உஷரா இருங்க… மத்திய அரசு போட்ட உத்தரவு…!

Vignesh

Next Post

#TnGov: 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்களுக்கு நாளை தான் கடைசி நாள்... உடனே இத செய்து முடிக்க வேண்டும்...! இல்லை என்றால் சிக்கல்

Fri Jul 15 , 2022
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்களை நாளைக்குள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 2021-22-ம் கல்வியாண்டில் மே மாதம் நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 2 முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதி […]

You May Like