fbpx

#TnGov: 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்களுக்கு நாளை தான் கடைசி நாள்… உடனே இத செய்து முடிக்க வேண்டும்…! இல்லை என்றால் சிக்கல்

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்களை நாளைக்குள் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 2021-22-ம் கல்வியாண்டில் மே மாதம் நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 2 முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதி வாய்ப்பும் அளிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னரும், பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு தொலைபேசி, கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று பலமுறை பள்ளி மாணவர்களது பெயர் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பு வழங்கினாலும், மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் அதில் திருத்தம் செய்ய கடிதம் பெறப்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது.

இந்தநிலையில் தற்போது பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நாளைக்குள் இந்த பணியை செய்து மூடிக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெயர் பட்டியலில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, அதில் திருத்தம் கோரி இந்த அலுவலகத்தால் மனுக்கள் பெறப்பட்டால், அரசின் நிதிச் செலவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்படும். எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பிழையில்லா விவரங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவில் ஆட்டத்தை தொடங்கிய குரங்கு அம்மை… 3,413 பேர் இது வரை பாதிப்பு…! எல்லாம் உஷரா இருங்க… மத்திய அரசு போட்ட உத்தரவு…!

Vignesh

Next Post

#Rain Alert: இன்று இந்த 5 மாவட்டத்தில் மட்டும் கனமழை எச்சரிக்கை...! வானிலை மையம் தகவல்...!

Fri Jul 15 , 2022
தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழ்நாடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,நீலகிரி, கோவை, […]

You May Like