PM-YASAVI திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாணவ,மாணவியர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின் PM-YASAVI (PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India) திட்டத்தின் கீழ் 2022-2023- ம் கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் கிழ் தேர்வு செய்யப்படும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிர்களுக்கு ஆண்டொன்றுக்க தலா ரூ.75,000 வீதமும்,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டொன்றுக்கு தலா ரூ.1,25,000 வழங்கப்படும்.
தகுதிகள்:
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இனங்களை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
அலைபேசி எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு, வருமான சான்று, சாதிச்சான்று, ஆதார் அட்டை இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
தேசிய தேர்வு அமைப்பால் கணினி வழியாக 11.09.2022 அன்று நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் அடிப்படையில் தேர்ந்தெருக்கப்படுவர். தமிழ்நாட்டினை சேர்ந்த 1,547 மாணவர்கள் தேர்வு செய்ய குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களில் குறைகள் ஏதும் இருப்பின் 31.08.2022 வரை திருத்தம் செய்து கொள்ளலாம். தேர்வர்களின் அனுமதிச்சீட்டு விவரங்களை 05.09.2022 அன்று முதல் தெரிந்து கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு https://socialjustice.gov.in/ என்ற இணையதளத்தளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.