fbpx

அரசு முக்கிய அறிவிப்பு…!மொத்தம் 2,849 காலி பணியிடங்கள்…! இன்று நேரடி கலந்தாய்வு…!

முதுகலை ஆசிரியர் பணிக்கு இன்று நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 2020-21 முதல் 2022-23ஆம் ஆண்டு முடிய உள்ள அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,849 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 1 காலிப் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களில் அரசியல் அறிவியில், வரலாறு, புவியியல், மனையியல், கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 1, உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோருக்கு எழும்பூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், தாவரவியல், விலங்கியல் முதுகலை ஆசிரியர்களுக்கு நேரடி நியமனக் கலந்தாய்வு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலக வளாகத்திலும் நடைபெறுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியிலில் உள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட கடிதம் மற்றும் அனைத்துக் கல்வி சான்றிதழ் நகலுடன் இன்று காலை 9 மணிக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்

Vignesh

Next Post

யூடியூபர் மாரிதாசுக்கு அடுத்த சிக்கல்...! தமிழக காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...!

Fri Oct 14 , 2022
கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத்-தான் காரணம் என கருத்து பதிவிட்ட யூடியூபர் மாரிதாசு என்பவருக்கு எதிராக தமிழக காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் மதுரையை சேர்ந்த பிரபல யூட்யூபர் மாரிதாஸ் திமுகவிற்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்து வருவார் அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மாரிதாஸ் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவ காரணம் தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்ற […]
மாரிதாஸ் மீதான வழக்கு..! உச்சநீதிமன்றத்தில் செக் வைத்தது தமிழக அரசு..! சூடுபிடிக்கும் வழக்கு..!

You May Like