fbpx

தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…! விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறலாம்…! முழு விவரம்

விவசாயிகள் கூட்டுறவுச்‌ சங்கங்களை அணுகி தகுதிக்கு ஏற்படக்‌ கடன்‌ பெற்று கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-07ஆம்‌ ஆண்டு முதல்‌ பயிர் கடனுக்கான வட்டி 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக்‌ குறைக்கப்பட்டு, தற்போது வரை 7 சதவீத வட்டியில்‌ பயிர்க்‌ கடன்‌ வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சதவீதம்‌ வட்டி இழப்பைத்‌ தமிழக அரசு வட்டி மானியமாகக்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களுக்கு வழங்கி வருகின்றது. 2009ஆம்‌ ஆண்டு முதல்‌ உரிய காலத்திற்குள்‌ கடனை திருப்பிச்‌ செலுத்தும்‌ விவசாயிகளுக்கு அவர்கள்‌ செலுத்த வேண்டிய வட்டிச்‌ சுமையினை அரசே ஏற்றுக்கொள்ளும்‌ என ஆணையிடப்பட்டு, விவசாயிகளுக்குத்‌ தொடர்ந்து வட்டியில்லா பயிர்க்கடனும்‌ வழங்கப்பட்டு வருகிறது.

மேலும்‌, உரியத்‌ தவணை தேதிக்குள்‌
பயிர்க்‌ கடனை திருப்பி செலுத்தும்‌
விவசாயிகள்‌ சார்பாக 7 சதவீத
வட்டியினை அரசே கூட்டுறவுச்‌
சங்கங்களுக்குச்‌ செலுத்தி வரும்‌
நிலையில்‌, கடந்த ஆண்டில்‌ (2022-23),
கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ மூலம்‌ 17.44 லட்சம்‌ விவசாயிகளுக்கு ரூ.13342.30 கோடி பயிர்க்‌ கடன்‌ வழங்கிச்‌ சாதனை
படைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்‌ டெல்டா மாவட்ட விவசாயிகளின்‌ பாசன வசதிக்காக மேட்டூர்‌ அணையிலிருந்து தண்ணீர்‌ திறக்கப்பட்டுள்ள நிலையில்‌, விவசாயிகளுக்குத்‌ தேவையான பயிர்க்கடனை வழங்க கூட்டுறவு சங்கங்களுக்குத்‌ தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. விவசாயிகள்‌ விதைகளை வாங்கவோ, விவசாயத்திற்குத்‌ தேவையான பொருட்கள்‌ மற்றும்‌ வளம்‌ உள்ளிட்ட அனைத்தின்‌ தேவைகளுக்காகவும்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களை அணுகி தகுதிக்கு ஏற்படக்‌ கடன்‌பெற்று கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

எங்கும் ரோபோ!... எதிலும் ரோபோ!... உலகின் முதல் AI மூலம் இயங்கும் DJ!... அமெரிக்கா வானொலி நிலையத்தில் அறிமுகம்!

Thu Jun 22 , 2023
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முழுநேர டிஜேவை (DJ) அமெரிக்கா வானொலி நிலையம், உருவாக்கி உள்ளது. வளர்ந்துவரும் நவீன காலகட்டத்திற்கேற்ப அனைத்து இடங்களிலும் மனிதர்களின் வேலைகளை குறைக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ரோபோக்கள் இறங்கிவிட்டன. அந்தவகையில் தற்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI தற்பொழுது தொழில்நுட்ப உலகில் மிகபெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு என்பது கணினிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாம் கேட்கும் கேள்விகளுக்கு […]

You May Like