fbpx

எல்லாம் தயாரா…? அனைத்து மாணவர்களுக்கும் ஒரு 22-ம் தேதி முதல் நேரடி வகுப்பு…! வெளியான முக்கிய அறிவிப்பு..‌.!

பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 22-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 22-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். இதில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் மற்றும் எம்பிஏ ஆகிய பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குகிறது. கடைசி வேலை நாள் டிசம்பர் 8-ம் தேதி ஆகும். இவர்களுக்கான பருவத்தேர்வுகள் டிசம்பர் 21அன்று தொடங்குகிறது. அதேநேரம் 2023-ம் ஆண்டு ஜனவரி 23-ல் மீண்டும் அடுத்த பருவத்திற்கான வகுப்புகள் தொடங்கும். மணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தரும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் வரும் பருவத்தேர்வு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

PM Kissan : அரசு வழங்கும் ரூ.2,000 உதவி தொகை நீங்களும் பெறலாம்…! தேதி அறிவிப்பு... எப்படி பெறுவது…?

Thu Aug 18 , 2022
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா 12வது தவணை எந்த தேதியில் வழங்கப்படும் என்பதை பார்க்கலாம். விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலுக்கும் உதவும் வகையில், மத்திய அரசு பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ .6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை […]

You May Like