fbpx

TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 27-ம் தேதிகுள் இதை செய்து முடிக்க வேண்டும்…! இல்லை என்றால் தேர்வு எழுதுவதில் சிக்கல்…!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தில் 27 ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2202 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் ஏப்ரல் 26-ம் தேதி வரையில் விண்ணப்பித்தனர். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்க 2,30,278 பேரும், தாள் 2 எழுதுவதற்கு 4,01, 885 பேரும் என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. எனவே விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு சில தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் 2 எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 27 ஆம் தேதி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்று அறிவிக்கப்படுகிறது.மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளும்பொழுது கவனமாக செயல்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் விவரங்களைப் புதுப்பித்தவுடன் முன்பக்கத்திலுள்ள சமரப்பி (Sahmit) பொத்தானை அழுத்தி செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.சமர்ப்பி (Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில் முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து பணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் மாற்றங்களைச் செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின் அதில் மேலும் மாற்றங்களைச் செய்யக் கூடாது. எனவே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் மீண்டும் சரிபார்த்துக் கொள்ளவும்.விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரி மற்றும் கல்வித்தருதி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகளான தாள் 1, தாள் 2 ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எந்தவித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.

Also Read: பயங்கர அலெர்ட்… டெல்லியை தொடர்ந்து… தெலுங்கானா மாநிலத்தில் 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை காய்ச்சல் உறுதி….!

Vignesh

Next Post

இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதி திரௌபதி முர்மு... இன்று பதவியேற்கிறார்

Mon Jul 25 , 2022
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா முன்னிலையில் திரௌபதி முர்மு பதவியேற்பார். திரௌபதி முர்மு உமா சங்கர் தீட்சித் லேனில் உள்ள தனது தற்காலிக இல்லத்திலிருந்து ராஜ்காட்டிற்கு காலை 08.15 மணிக்கு புறப்படுவார். அவர் காலை 08.30 மணியளவில் ராஜ்காட் சென்றடைவார்..பின்னர் காலை 09:22 மணிக்கு குடியரசு தலைவர் […]

You May Like