TNPSC, RRB போன்ற அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது, 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, RRB, IBPS, TNUSRB, SSC, TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20,000-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
மேலும், இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்கு உதவும் வகையில், தேர்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, 38 மாவட்டங்களில் இயங்கும் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு, பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள மற்றும் முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் போட்டித் தேர்வு வெற்றியாளர்கள் ஆகியோர் https://bit.ly/facultyregistrationform என்ற Google Link-இல் உள்ள விண்ணப்பத்தினை 10.01.2023-க்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 044-22501006 /22501002 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.