விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG, UKG, 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கான அறிவிப்பை ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று வெளியிட்டுவந்த பள்ளிக்கல்வித்துறை, இந்த ஆண்டில் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் இருந்து வந்தது. விஜயதசமி இன்று கொண்டாடப்பட உள்ள சூழலில், மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது .
அரசுப்பள்ளிகளில் LKG, UKG, 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு பள்ளிக்கு ஓர் ஆசிரியராவது இன்று பணிக்கு வர வேண்டியது கட்டாயம். உரிய அறிவுறுத்தல் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குநரகம் ஆணை வெளியிட்டுள்ளது.