fbpx

மக்களே…! பொங்கலுக்கு இன்று முதல் கூடுதலாக 340 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…! புதிய அறிவிப்பு…!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சென்னையிலிருந்து கூடுதலாக 340 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தனது அறிவிப்பில்; அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பொங்கலையொட்டி, வெளியூர்களுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையங்களுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகளை இன்று முதல் 14-ம் ஆகிய மூன்று நாட்களுக்கு இயக்கப்படவுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், பொது மக்களின் வசதிக்காக வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் பூவிருந்தவல்லி Bye Pass, தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (MEPZ) & தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் மற்றும் கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 பேருந்து நிலையங்களுக்கு 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் முடிந்து, சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக 17, 18 ஆகிய தேதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் 50 பேருந்துகள் மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் அதிகாலை 125 பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெரும் ஏமாற்றம்...! இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை...! சென்னை வானிலை மையம் தகவல்...!

Thu Jan 12 , 2023
வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடகிழக்கு பருவமழை இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் […]

You May Like