fbpx

சமூகத்தில் கலவரங்களை தூண்டும் சாதி வளர்ச்சிக்கு எதிரானது..!! – உயர் நீதிமன்றம்

சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் ஜாதி, வளர்ச்சிக்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள ஆவல்பட்டியில் வரதராஜ பெருமாள், சென்ராய பெருமாள் கோவில்களுக்கு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக விசாரணை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.  இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

சாதியை நீடித்து நிரந்தரமாக்கச் செய்யும் வகையிலான இந்த கோரிக்கை, அரசியல் சாசனம் மற்றும் பொது கொள்கைக்கு விரோதமானது எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யும்படி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அந்த உத்தரவில், சாதி, ஒரு சமூக தீங்கு. சாதியில்லா சமுதாயம் தான் நம் அரசியல் சாசனத்தின் இலக்கு. சாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது எனத் தெரிவித்துள்ளார். சாதி என்பது கற்றுக் கொண்டதில் இருந்தோ, வாழ்வில் செய்த செயல்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, “பிறர்பொக்கும் எல்லா உயிருக்கும்” என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது வேதனை அளிக்கிறது என்றார். சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

சாதி அடிப்படையில் எந்த பாரபட்சமும் இருக்க கூடாது, சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தை வகுத்த தலைவர்களின் கனவாக இருந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசியல் சாசனம் வகுத்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில், சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

Read more : நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகள் மூடப்படுகிறதா..? மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றசாட்டு..!

English Summary

It is against caste development which incites riots in the society ..!! – High Court

Next Post

வாஸ்து டிப்ஸ் : வீட்டில் குபேரர் சிலையை இந்த திசையில் வைத்தால் செல்வம் பெருகும்..!!

Fri Feb 14 , 2025
Vastu tips: Just do these things and there will always be money in the house!

You May Like