இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர் : Scientific Assistant – B, Stipendiary Trainee/ Technician மற்றும் பல்வேறு காலியிடங்கள் உள்ளன.
காலிப்பணியிடங்கள் : 391
கல்வித் தகுதி :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் 10ஆம் வகுப்பு, டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Scientific Assistant – B பணிக்கு Diploma in Engineering (Civil / Electrical / Mechanical / Electronics / Instrumentation) / B.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Nurse – A பணிக்கு 12ஆம் வகுப்பு, Diploma in Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technician/C (X-Ray Technician) பணிக்கு 12ஆம் வகுப்பு / Medical Radiography தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18ஆகவும், அதிகபட்சம் 30ஆகவும் இருக்க வேண்டும்.
சம்பளம் :
மாத சம்பளம் ரூ.20,000 முதல் ரூ.68,697 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Examination, Personal Interview / Skill Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.04.2025
கூடுதல் விவரங்கள் : https://www.npcilcareers.co.in/KGS20251203/documents/Advt.pdf
Read More : சீமான் மீது அதிருப்தி..!! NTK-வில் இருந்து விலகி TVK-வில் இணைந்து கொண்ட வெற்றிக்குமரன்..!!